Omicron திரிபின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட தேவையான சாத்தியமான சுகாதார நடவடிக்கைகள் குறித்து Doug Ford அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதாக தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி Kieran Moore தெரிவித்தார்.
Omicron திரிபுக்கு எதிராக Ontarioவை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கு, தேவையான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து அடுத்து வரும் நாட்களில் விவாதிக்கப்படும் எனவும் Moore கூறினார்
Ontariவில் பதிவாகும் 100 சதவீத தொற்றுகள் இந்த மாத இறுதிக்குள் Omicron திரிபின் வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் Moore தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வர் Ford புதன்கிழமை (15) காலை தனது அமைச்சரவையை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பில் Omicron திரிபின் பரவல் அச்சுறுத்தல் குறித்தும் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி Moore முன்வைத்துள்ள சுகாதார பரிந்துரைகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை (14) Ontario சுகாதார அதிகாரிகள் 1,429 புதிய COVID தொற்றுகளை Ontariவில் பதிவு செய்தனர்.