தேசியம்
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்ட Waterloo விமான நிலையம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Waterloo விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது.

Waterloo பிராந்திய காவல்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை (13) பிற்பகல் Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Waterloo சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 2:10 மணியளவில் ஒரு விமானத்தில் வெடிகுண்டு இருந்ததான புகார் காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டது.

விமானத்தில் வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய வெடிபொருட்களை அகற்றும் பிரிவைச் சேர்ந்தவர்கள் சோதனைகளை முன்னெடுகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் விமான நிலையம் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

Related posts

கனேடியர்களை திருப்பி அழைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Stanley Cup: இறுதி சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

Lankathas Pathmanathan

Manitobaவில் விரைவில் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment