வார விடுமுறையில் Ontario, Quebec, Newfoundland and Labrador மாகாணங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது.
சனிக்கிழமையன்று Ontario, Quebec மாகாணங்கள் முழுவதும் கடுமையான புயல் சேதம் ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதே நிலை ஞாயிற்றுக்கிழமை Newfoundland and Labrador மாகாணத்திலும் ஏற்பட்டது.
சனிக்கிழமை Ontario மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் கடும் பனி மற்றும் உறை பனி மழை பெய்ததால் பல வீதிகள் மூடப்பட்டன.
தெற்கு Ontarioவில் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து சனிக்கிழமை காலை வரை தொடர்ந்த பலமான காற்று காரணமாக 100,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது
இதற்கிடையில் Quebecகில் உறைபனி மழை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்றினால் 400,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது