முதற்குடியின குழந்தைகளுக்கான இழப்பீட்டை ஈடுகட்ட 40 பில்லியன் டொலர் நிதியை செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ள பொருளாதார அறிக்கையில் அரசாங்கம் இணைகிறது.
புதிய Liberal அரசாங்கத்தின் முதலாவது பொருளாதார அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியாகும்.
துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland இந்த அறிக்கையை வெளியிடவுள்ளார்.
வலுவான பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கையாள்வதிலும், COVID தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முடிக்கும் போது கனேடியர்களுக்கு தேவையான ஆதரவை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துவதாக இந்த அறிக்கை அமையும் என கூறப்படுகின்றது.
இந்த பொருளாதார அறிக்கை 2015 மற்றும் 2019 தேர்தல்களை தொடர்ந்து வெளியிடப்பட்டதைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.