கனடிய இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் கனேடிய அரசும் இராணுவமும் இணைந்து மன்னிப்பு கோரியது.
அரசியல், இராணுவத் தலைவர்கள் இராணுவ பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மன்னிப்பை கோரியதன் மூலம் கனேடிய ஆயுதப்படைகளின் பாரம்பரியத்தில் ஒரு இருண்ட காலகட்டத்திலிருந்து அரசாங்கம் வெளிவர முயல்கிறது.
பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், துணை அமைச்சர் Jody Thomas, பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் Wayne Eyre ஆகியோர் இணைந்து இந்த மன்னிப்பை கோரினர்.
கனேடிய இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் என்ற கசப்பான நிலையை அகற்றுவதற்கு தேவையான நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் அர்ப்பணிக்க கனேடிய அரசாங்கங்கள் தவறிவிட்டதாக அமைச்சர் ஆனந்த் தனது மன்னிப்பில் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் உறவை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது நோக்கப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான தற்போதைய மற்றும் முன்னாள் ஆயுதப் படை உறுப்பினர்களுடன் மத்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் டொலர் தீர்வைத் தொடர்ந்து இந்த மன்னிப்பு கோரப்பட்டது.