தேசியம்
செய்திகள்

Alberta அடுத்த வாரம் COVID கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது

Alberta மாகாணம் அடுத்த வாரம் COVID கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது.

முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த தளர்வினால் அதிகமானவர்கள் விடுமுறை காலத்தில் ஒன்று கூடுவார்கள் என முதல்வர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை Albertaவின் தற்போதைய அவசரநிலை காலாவதியாகும் போது புதிய தளர்வு அறிவிப்பு வெளியாகும் என அவர் உறுதியளித்தார்.

Albertaவில் புதன்கிழமை 70 பேர் தொற்றின் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த எண்ணிக்கை September மாதமே 28 ஆம் திகதி 266 ஆக இருந்தது.

செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ள மாற்றங்களை முதல்வர் விவரிக்கவில்லை.

முன்னர் விரைவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்காக Kenney கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பாக மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற Edmonton Oilers

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment