December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

கடந்த Remembrance தினத்தில் கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக Connecting GTA உறுப்பினர்கள் 11 ஆயிரம் டொலர்கள் நிதி திரட்டினர்.

Oshawaவில் உள்ள Pathwise கடன் சங்கத்தின் (Credit Union) வாகன நிறுத்துமிடத்திலிருந்து Scarboroughவில் உள்ள Boston Pizza வாகன நிறுத்துமிடம் வரை நிகழ்ந்த வாகன பேரணியின் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டது.

இந்த பேரணியில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொண்டன.

Connecting GTA , கனடிய படையினரை நினைவுகூரும் வகையிலும், The Royal Canadian Legionனை ஆதரிப்பதற்காவும் இந்த வருடாந்திர நினைவு பேரணியை இந்த வருடம் முதல் ஆரம்பித்தது.

COVID தொற்று காலம் முழுவதும், இரத்து செய்யப்பட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட காரணங்களினால் Royal Canadian Legion பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது.

இதனை எதிர்கொள்ளும் முகமாக Connecting GTA நிறுவனர் சுரேஷ் குமார் இந்த நிதி திரட்டல் நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

Connecting GTA அறக்கட்டளையின் சார்பாக சேகரிக்கப்பட்ட அனைத்து நிதியும் நான்கு Royal Canadian Legion கிளை அலுவலகங்களுக்கு (Oshawa: Royal Canadian Legion Branch 43,
Ajax: Royal Canadian Legion Branch 322, Toronto: Royal Canadian Legion Branch 258, Markham: Markham District Veterans Association) நன்கொடையாக வழங்கப்பட்டது.

Royal Canadian Legion கனடாவின் மிகப்பெரிய படையில் சேவையாற்றியவர்களுக்கான ஆதரவு மற்றும் சமூக சேவை அமைப்பாகும்.

Connecting GTA பொருளாதார மேம்பாடு, சமூக செயல்பாட்டிற்காக செயலாற்றும்தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களினால் ரவலாக அங்கீகரிக்கப்பட்ட வலைப் பின்னல் அமைப்பாகும்.

Related posts

Texas பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

Paris Paralympics: இரண்டாவது நாள் மேலும் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத குழந்தை மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment