February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் பொறியாளர் சீன நிறுவனத்தின் சார்பாக செயல்பட்டார்: RCMP குற்றம்

கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் பொறியாளர் சீன நிறுவனத்தின் சார்பாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
CSA எனப்படும் கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் ஊழியர் ஒருவர், சீன விண்வெளி நிறுவனம் ஒன்றின் சார்பாக தனது கடமைகளை நிறைவேற்றியதாக கூறி நம்பிக்கையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Quebec மாகாணத்தை சேர்ந்த Wanping Zheng மீது இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக RCMP ஒரு செய்தி குறிப்பில் கூறியது.

ஐஸ்லாந்தில் நிறுவப்படும் செயற்கைக்கோள் நிலையத்திற்கான ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்த CSAஉடன் பொறியியலாளராக தனது அந்தஸ்தைப் பயன்படுத்தினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Zheng சீன விண்வெளி நிறுவனத்தின் சார்பாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது என RCMP கூறியது.

கனேடிய விண்வெளி துறையின் பாதுகாப்பு பிரிவில் இருந்து தகவலைப் பெற்ற பின்னர் தமது ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்கக் குழு 2019ஆம் ஆண்டு October மாதத்தில் விசாரணையை ஆரம்பித்ததாக RCMP தெரிவித்தது.
61 வயதானவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஆளுநர் நாயகத்தை நியாயப்படும் பிரதமர்

Lankathas Pathmanathan

Quebec அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடவையை மூடும் பணி: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடா குடியேற்றத்தைக் கையாளும் விதத்தில் COVID நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment