தேசியம்
செய்திகள்

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Ontarioவில் COVID தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (07) காலை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த விபரம் வெளியானது.

Omicron திரிபு இல்லாவிட்டாலும் தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என புதிய modelling தரவுகள் தெரிவிக்கிறது.

புதிய Omicron திரிபில் இருந்து பரவாவிட்டாலும் கூட, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள் எண்ணிக்கை January மாதம் 250 முதல் 400ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இது மருத்துவமனைகளை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனவும் தரவுகள் காட்டுகிறது.

Omicron திரிபின் பரவலானது COVID தொற்றின் தற்போதைய கணிப்புகளை விட அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையுடன் Ontarioவில் தொற்றின் ஏழு நாள் சராசரி  940 வரை அதிகரித்துள்ளது.

June மாத ஆரம்பத்தில் மூன்றாவது அலையின் சரிவுக்குப் பின்னர் தொற்றின் எண்ணிக்கை இந்த நிலையில்  காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய modelling தரவுகள் அதிருப்தி அளிக்கிறது என சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தடுப்பூசி போடப்படாதவர்களே பெரும்பாலான மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும், பெரும்பாலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

26 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் EI காப்பீடு!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு முயற்சி குறித்து NDP தலைவர் பிரதமருக்கு கடிதம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment