February 23, 2025
தேசியம்
செய்திகள்

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

வத்திக்கானுக்கான தமது பயணத்தை ஒத்தி வைப்பதாக கனடாவின் முதற்குடியினர் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தனர்.
COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Chief RoseAnne Archibald அறிவித்தார்.

December 17 முதல் 20 வரை பாப்பரசர் போப் பிரான்சிசுடன்  முதற்குடியினர் பிரதிநிதிகள் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த பயணத்தை ஒத்திவைப்பதற்கான முடிவு கடினமானது என கத்தோலிக்க ஆயர்களின் கனடிய சபையும் தேசிய முதற்குடியின அமைப்பும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறுகிறது.

இந்த பயணத்தை ஏற்பாடு செய்யும் கத்தோலிக்க ஆயர்களின் கனடிய சபையின் தலைவரும் துணைத் தலைவரும் 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த சந்திப்பை மீண்டும் திட்டமிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தொற்றின் நான்காவது அலைக்குள் கனடா : வைத்தியர்களின் புதிய எச்சரிக்கை!

Gaya Raja

பாலஸ்தீன பொதுமக்களுக்கு 25 மில்லியன் டொலர்கள் கனடா உதவி

Gaya Raja

முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது: பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment