February 22, 2025
தேசியம்
செய்திகள்

உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்கும் Merck

உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Merck கனடா முடிவு செய்துள்ளது.

உலகளாவிய விநியோகத்திற்காக அதன் COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Thermo Fisher Scientific நிறுவனத்துடன் கூட்டுசேர்வதாக Merck கனடா திங்கட்கிழமை (06) அறிவித்தது.

Thermo Fisher Scientific நிறுவனம் தற்போது Whitby Ontarioவில் இயங்குகின்றது.

இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள COVID தடுப்பு மருந்துகள் கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் , ஆசியா பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் விநியோகிக்கப்படும்.

இந்த தடுப்பு மருந்துக்கான ஒப்புதலை Health கனடா இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவித்தலின் மூலம் கனடாவின் உயிரி உற்பத்தி திறனை மீண்டும் உருவாக்குகிறோம் என புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne கூறினார்.

எதிர்கால பொது சுகாதார அவசர நிலைகளுக்கு கனடா சிறப்பாக தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் எதிர்கால பொது சுகாதார அவசர நிலைகளுக்கு கனடாவின் விநியோகச் சங்கிலியை சிறப்பாகப் பாதுகாக்க உதவும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

Related posts

கனடாவில் தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறக் கூடாது: Elizabeth May

Lankathas Pathmanathan

Conservative தலைமைக்கான சிறந்த மாற்றாக Jean Charest இருப்பார்: Patrick Brown

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான ஆறாவது கனடியர்

Lankathas Pathmanathan

Leave a Comment