தேசியம்
செய்திகள்

மாகாணசபை தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் வேட்பாளரானார்!

எதிர்வரும் Ontario மாகாணசபை தேர்தலில் Scarborough North தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.

அடுத்த வருடம் (2022) June மாதம் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் Scarborough North தொகுதியின் Liberal கட்சியின் வேட்பாளராக அனிதா ஆனந்தராஜன் போட்டியிடவுள்ளார்.

கட்சியின் வேட்பாளருக்கான நியமனப் போட்டியில் Scarborough North தொகுதியின் Liberal கட்சியின் உறுப்பினர்கள் அனிதா ஆனந்தராஜனுக்கு ஆதாரவாக வாக்களித்துள்ளனர்.

அனிதா ஆனந்தராஜன் Ottawa பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்.

தற்போது அந்தத் தொகுதியை Progressive Conservative கட்சி சார்பில் அமைச்சர் Raymond Cho பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

 

Related posts

அனைத்து மாகாணங்கள், 2 பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கைகள்

Lankathas Pathmanathan

இரண்டு வருடங்களில் Calgary விடுதியில் $26.8 மில்லியன் டொலர்கள் தனிமைப்படுத்தலுக்கு செலவு

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan

Leave a Comment