February 21, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

COVID தொற்றின் ஆரம்பத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (30) வரை Ontarioவில் 10 ஆயிரம் மரணங்கள் தொற்றின் காரணமாக பதிவாகியுள்ளன.

செவ்வாயன்று மூன்று புதிய COVID மரணங்களை Ontario பதிவு செய்த நிலையில் மரணங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

கடந்த ஆண்டு March மாதம் 17ஆம் திகதி Ontarioவின் முதலாவது COVID தொடர்பான மரணம் பதிவானது

பின்னர், April மாதம் 30ஆம் திகதிக்குள்ளான அடுத்த ஆறு வாரங்களுக்குள் முதல் 1,000 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன.

January மாதம் 11ஆம் திகதியன்று இரண்டாவது அலைக்கு மத்தியில் Ontario 5,000 மரணங்களை எட்டியது,

செவ்வாய்க்கிழமை வரை பதிவான 10 ஆயிரம் மரணங்களில், நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் 3,824 COVID தொடர்பான மரணங்கள் பதிவானதாக மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Ontario கனடாவில் இரண்டாவது அதிக இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

Quebecகில் இதுவரை COVID காரணமாக 11,500க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

Related posts

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

அவசர காலச்சட்ட பயன்பாடு குறித்த பொது விசாரணைகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

Leave a Comment