பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் கனேடிய அரசும் இராணுவமும் இணைந்து மன்னிப்பு கோரவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், துணை அமைச்சர் Jody Thomas, பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் Wayne Eyre ஆகியோர் இணைந்து இந்த மன்னிப்பை கோரவுள்ளனர்.
இந்த மன்னிப்பு எதிர்வரும் 13ஆம் திகதி திகதி கோரப்படும் என திங்கட்கிழமை வெளியான ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது
பாதிக்கப்பட்டவர்களுடன் உறவை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது நோக்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், பாகுபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு படையின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரிடமும் இந்த பொது மன்னிப்பு கோரப்படும் என திங்கட்கிழமை வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது