கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவராக General Wayne Eyre நியமிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டார்.
பாலியல் தவறு நடத்தைகளால் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கனடிய ஆயுதப் படைகளின் கலாச்சார மாற்றத்தை Eyre தொடர்ந்து மேற் பார்வையிட்டார் என பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்து தனது Twitter பக்கத்தில் இந்த புதிய நியமனத்தை உறுதிப்படுத்தினார்.