கனேடிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி வழங்க ஆரம்பித்திருப்பது நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரம் கனடா முழுவதும் உள்ள குழந்தைகள் COVID தொற்றின் தடுப்பூசியைப் பெற ஆரம்பித்துள்ளனர்.
கனடாவின் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு பெரிய உதவியாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசியை கனடா அங்கீகரித்தது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்கள தரவுகளின்படி, இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகள் கனேடிய மக்கள் தொகையில் சுமார் எட்டு சதவிகிதம் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி கனடாவை வந்தடைந்த நிலையில், சில மாகாணங்கள் தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ளன.
கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது தடுப்பூசி செவ்வாய்கிழமை Torontoவில் வழங்கப்பட்டது .
தற்போது, கனேடியர்களில் 78 சதவீதம் பேர் குறைந்தது ஒரு COVID தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.