குழந்தைகளுக்கான முதல் COVID தடுப்பூசியை கனடா அங்கீகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம் வழங்கியது.
5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் இப்போது 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அளவை விட மூன்றில் ஒரு பங்கு அளவு தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்களாகின்றனர் .
இந்த வயதினருக்குப் பயன்படுத்த கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் COVID தடுப்பூசி இதுவாகும்.
இது COVID தொற்றுக்கு எதிரான கனடாவின் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
குழந்தைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை கனடாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடாவில் உள்ள அனைத்து 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தேவையான 2.9 மில்லியன் தடுப்புசிகளும் அடுத்த வார இறுதியில் மொத்தமாக கனடாவை வந்தடையும் எனவும் கூறப்படுகிறது.
தகுதியான அனைத்து குழந்தைகளுக்கும் முதல் தடுப்பூசிகை வழங்க இது போதுமான அளவு என கொள்முதல் அமைச்சர் Filomena Tassi வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
Health கனடா இரண்டு தடுப்பூசிகளையும் 21 நாட்கள் இடைவெளியில் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனாலும் நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளுக்கு இடையே எட்டு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியை பரிந்துரைக்கிறது.