Vancouver தீவு இராணுவ தளத்தில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
கனேடியப் படைத் தளமான Comoxசில் நிகழ்ந்த வெடி விபத்து, அருகிலுள்ள பொது விமான நிலையத்தை உலுக்கியது.
வியாழன் பிற்பகல் நிலவரப்படி இந்த வெடி விபத்தில் 10 பேர் சிகிச்சை பெற்றனர்.
இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆறு பேர் இராணுவ தள மருத்துவர்களால் சிகிச்சை பெற்றனர்.
இந்த வெடிப்பு இயற்கை எரிவாயு காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனாலும் இதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பில் எந்த விமானமும் சேதமடையவில்லை எனவும் விமான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.