February 22, 2025
தேசியம்
செய்திகள்

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகளை நீக்க கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குறுகிய பயணங்களுக்கு பின்னர்  கனடாவுக்கு திரும்பும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR சோதனைத் தேவையை மத்திய அரசு நீக்குகிறது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தவுடன், கனடாவை விட்டு வெளியேறி 72 மணி நேரத்திற்குள் மீண்டும் நாட்டிற்கு திரும்பும் பயணிகள், COVID சோதனையின் எதிர்மறையான ஆதாரத்தைக் காட்ட வேண்டிய தேவை இல்லை என கூறப்படுகிறது.

72 மணி நேரத்திற்கும் மேலான பயணங்களுக்கு PCR சோதனைத் தேவை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும்   கூறப்படுகிறது.

தற்போது உள்ள நடைமுறைக்கு அமைவாக கனடாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட மூலக்கூறு COVID சோதனைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறை முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கும் பொருந்தும்.PCR சோதனை நுழைவுத் தேவையை நீக்குமாறு மத்திய அரசின் மீது அண்மைக் காலமாக அழுத்தம் அதிகரித்து வருகிறது.

COVID மூலக்கூறு சோதனையை முடிவுக்கு கொண்டு வர பல மாகாண முதல்வர்கள் விரும்புகிறார்கள் என Ontario முதல்வர் Doug Ford செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

COVID மூலக்கூறு சோதனையை முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள்: Ford

திங்கட்கிழமை கனடாவின் முதல்வர்களுடனான சந்திப்பில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டதாகவும் Ford கூறினார்.

இந்த விடயம் செவ்வாய்கிழமை பிரதமர் Justin Trudeauவுடனான முதல்வர்களின் சந்திப்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

Playoff தொடருக்கு தகுதி பெற்ற Toronto Blue Jays!

Lankathas Pathmanathan

மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்த Québec

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment