தேசியம்
செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் Trudeau!

அமெரிக்கா ஜனாதிபதியுடனான சந்திப்புக்காக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை காலை Washington பயணமானார்.
அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் Three Amigos உச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இரண்டு நாட்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக  பிரதமர் Trudeau அமெரிக்க தலைநகரை சென்றடைந்தார்.
கனடா அமெரிக்க இடையிலான விநியோகச் சங்கிலியின் சீரான ஓட்டத்தை உறுதிப்டுத்துவது இரு நாடுகளின் நலன்களுக்கு சிறந்தது என்பதை வலியுறுத்த அமெரிக்க ஜனாதிபதியுனுடனான சந்திப்பை பயன்படுத்துவேன் என பிரதமர் Trudeau தெரிவித்தார்.
கனடாவின் முக்கியமான கனிம வளங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் உரையாடவுள்ளதாகவும் Trudeau தெரிவித்தார்

காலநிலை மாற்றம் குறித்து தனது கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் கூறினார்
துணைப் பிரதமர்  Chrystia Freeland, சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino  ஆகியோரும் இந்த பயணத்தில் பிரதமர் Trudeauவுடன் இணைந்துள்ளனர்.

Related posts

லிபியாவிற்கு $5 மில்லியன் மனிதாபிமான உதவியை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

Bell ஊடக வலைய பணி நீக்கங்கள் குறித்து பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் முடிவுக்கு வரும் கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment