தேசியம்
செய்திகள்

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நில எல்லை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

March மாதம் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர், முழுமையாக தடுப்பூசி போட்ட கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அமெரிக்காவிற்கு பயணிக்கும் கனடியர்கள் COVIDக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதன் ஆதாரத்தை வழங்க வேண்டும்.

மீண்டும் கனடாவுக்கு வரும்போது, வருகைக்கு முந்தைய COVID மூலக்கூறு சோதனை முடிவை வழங்க வேண்டும் என கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்தது.

குடியுரிமை மற்றும் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் இந்த சோதனை முடிவை வழங்க வேண்டும் எனவும் இந்த முடிவுகள் 72 மணி நேரம் செல்லுபடியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முக்கிய தரை எல்லைக் கடப்புகளில் அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகள்,  சில பகுதிகளில் மூன்று மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டது.

புதிய விதிகள் அமலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே Buffalo மற்றும் Niagara நீர்வீழ்ச்சி இடையே Peace பாலத்தில் காத்திருப்பு நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எட்டியது.

Alberta எல்லை நகரமான Couttsசில், நில எல்லையை கடப்பதற்கான காத்திருப்பு நேரம் காலை வரை படிப்படியாக நீண்டது.

கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின் படி இன்று மதியத்திற்குள், நில எல்லையை கடப்பதற்கு வாகனங்கள் நான்கு மணி நேரம் வரை காத்திருந்தன.

Quebecகில் உள்ள St-Bernard-de-Lacolle நில எல்லை வழியாக செல்ல மூன்று மணி நேர தாமதம் திங்கள் மதியம் எதிர் கொள்ளப்பட்டது.

8,891 கிலோ மீட்டர் நீளமுள்ள கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லையில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட நுழைவு கடவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் திங்கட்கிழமை அறிமுகமாகிறது

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment