தேசியம்
செய்திகள்

Ontarioவில் 85 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Ontario மாகாணம் திங்கட்கிழமை ஒரு புதிய தடுப்பூசி மைல் கல்லை பதிவு செய்தது.

திங்களுடன் Ontarioவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 85 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக கருதப்படுவதாக மாகாணம் அறிவித்துள்ளது.

அவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாகவும் மாகாணம் அறிவித்துள்ளது.

இது 11 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அல்லது Ontario மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கு சமமாகும்

Delta மாறுபாட்டின் பரவலைத் தடுக்க, தகுதியான Ontario வாசிகளில் 90 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை திங்கட்கிழமை Ontarioவில் 480 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.

இதன் மூலம் மூன்று நாட்களுக்குப் பின்னர் தொற்றின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு திங்களன்று பதிவானது.

கடந்த மூன்று நாட்களில் Ontarioவில் 500 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்  பதிவாகின

ஞாயிற்றுக்கிழமை 636 பேருக்கும், சனிக்கிழமை 508 பேருக்கும், வெள்ளிக்கிழமை 563 பேருக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் திங்களன்று Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 476 ஆக உள்ளது.

இது கடந்த வாரத்தில் 371 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை மேலும் இரண்டு இறப்புகள் உறுதி செய்யப்பட்டன.

இதன் மூலம் Ontarioவில் COVID தொடர்பான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,900 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அதிகரிக்கும் வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

விமானத்தின் கதவை திறந்த குற்றத்தில் கனடியர் தாய்லாந்தில் கைது

Lankathas Pathmanathan

நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் NDP தலைவி Andrea Horwath

Leave a Comment