தேசியம்
செய்திகள்

உகாண்டாவிற்கு 2 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கிய கனடா!

கனடா உகாண்டாவிற்கு 2 மில்லியன் COVID தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குகிறது.
2 மில்லியன் Moderna COVID தடுப்பூசிகளை கனடா உகாண்டாவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

WHO தலைமையிலான COVAX தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கனடாவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை அமைந்தது.

உகாண்டாவிற்கு கனேடிய நிதியுதவி தடுப்பூசிகளின் இந்த முதல் நன்கொடை ஒரு குறிப்பிடத்தக்க தருணம் என உகாண்டாவின் சுகாதார அமைச்சர் வைத்தியர் Jane Ruth Aceng கூறினார்.

COVAX தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் மூலம் ஏழை நாடுகளுக்கு 10 மில்லியன் Moderna COVID தடுப்பூசிகளை கனடா நன்கொடையாக வழங்குவதாக சனிக்கிழமை இத்தாலியின் தலைநகரம் ரோமில் நடந்த G20 உச்சிமாநாட்டில் கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார்.

Modernaவின் 10 மில்லியன் COVID தடுப்பூசிகளை COVAX தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குவதாகவும், ஆப்பிரிக்காவில் mRNA தடுப்பூசிகளை உருவாக்க உதவுவதற்காக 15 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாகவும் கடந்த மாதம், பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார்.

மொத்தத்தில், நிதி பங்களிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் நேரடி விநியோகம் ஆகியவற்றுக்கு ஊடாக , அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 200 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உதவுவதாக கனடா கூறுகிறது.

Related posts

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

Lankathas Pathmanathan

அனைத்து மட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்ட முன்னாள் Toronto நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment