பெரியவர்களுக்கான Pfizer COVID booster தடுப்பூசியை கனடா அங்கீகரித்துள்ளது.
Health கனடா 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.
முதல் இரண்டு COVID தடுப்பூசி பெற்றவர்கள் காலப்போக்கில் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைப் பேணுவதற்கு இந்த booster வடிவமைக்கப்பட்டுள்ளது.
Booster தடுப்பூசி வழக்கமான Pfizer தடுப்பூசியைப் போலவே செயல்படும்.
முதல் இரண்டு தடுப்பூசிகளுக்கு பின்னர் குறைந்தது ஆறு மாதங்களில் booster தடுப்பூசி வழங்கப்படும்.
Health கனடாவின் மதிப்பாய்வு, booster தடுப்பூசிகள் கட்டுப்பாட்டாளரின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத் தேவைகளைப் பூர்த்தி செய்ததாகக் கண்டறிந்தது என திணைக்களத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு ஏற்கனவே மூன்றாவது தடுப்பூசி வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.