December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகரிக்கும் COVID தொற்று !

கனடாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுகளை கொண்டுள்ளவர்கள் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது.

நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் தற்போது பதிவாகும் நாளாந்த தொற்றுக்களின் எண்ணிக்கையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானதாக உள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த விபரத்தை வெளியிட்டார்.

தடுப்பூசி பெறாத 12 வயதுக்குட்பட்ட சுமார் 4.3 மில்லியன் குழந்தைகள் உள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.

குழந்தைகளுக்கான 2.9 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா கொள்வனவு செய்துள்ளது.

ஆனாலும் Health கனடாவின் ஒப்புதலை இந்த தடுப்பூசி இதுவரை பெறவில்லை.

தடுப்பூசி குறித்த Health கனடாவின் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக Tam உறுதிப்படுத்தினார்.

Related posts

இறையாண்மை குறித்த வாக்கெடுப்பு பொறுப்பற்றது: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

பதவி விலகினார் கனடாவின் ஆளுநர் நாயகம்

Lankathas Pathmanathan

A.L. wild-card தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Blue Jays

Lankathas Pathmanathan

Leave a Comment