கனடிய இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகளை சிவில் நீதி அமைப்பிற்கு மாற்ற பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு செய்துள்ளார்
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி Louise Arbourரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பாலியல் முறைகேடு விசாரணையில் கனடிய இராணுவம் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றது.
கடந்த February மாதம் முதல், 11 மூத்த கனேடிய இராணுவ தலைவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க பதவிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் அல்லது கட்டாயம் ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.