Ontario அரசாங்கம் சுகாதார செலவினங்களை அதிகரிப்பதுடன் COVID ஆதரவை படிப்படியாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.
Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது
இதில் இந்த நிதியாண்டில் 21.5 பில்லியன் டொலர் பற்றாக் குறையை நிதியமைச்சர் Peter Bethlenfalvy எதிர்வு கூறினார்.
சுகாதாரச் செலவினங்களை அதிகரித்து, சாலைகள், பாலங்களில் அதிக முதலீடு செய்வதுடன் தொற்றிலிருந்து வெளியேறும் பாதையில் COVID ஆதரவை படிப்படியாக நிறுத்துவதாக இந்த அறிவித்தலில் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிதியாண்டின் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தின் 33.1 பில்லியன் டொலர்களை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் Doug Ford இந்த வாரம் அறிவித்த 15 டொலர் குறைந்தபட்ச ஊதியம், இலையுதிர் கால பொருளாதார அறிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது.