கனடாவில் வெள்ளிக்கிழமை மீண்டும் 3,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
Albertaவில் மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
வெள்ளியன்று 1,051 தொற்றுக்களும் 16 மரணங்களும் Albertaவில் பதிவு செய்யப்பட்டன.
British Columbiaவில் 667 தொற்றுக்களும் 13 மரணங்களும் பதிவு செய்யப்பட்டன.
Quebecகில் 676 தொற்றுகளும் 6 மரணங்களும், Ontarioவில் 496 தொற்றுகளும் 2 மரணங்களும் பதிவாகின.
Saskatchewanனில் 312 தொற்றுகளும் 4 மரணங்களும் பதிவு செய்யப்பட்டன.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் வெள்ளியன்று தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.
கனடாவில் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் 3,406 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன.