வரவிருக்கும் விடுமுறை நாட்களுக்கான ஆயத்தமாக கனடா முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட பருவகால ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக கனடா Post தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நத்தார் தினத்திற்கு முன்னைய நாளுடன் முடிவடையும் இரண்டு வாரங்களில், கனடா Post ஊழியர்கள் 20 மில்லியன் பொதிகளை கனேடியர்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் அவற்றில் December மாதம் 21ஆம் திகதி மாத்திரம் 2.4 மில்லியன் பொதிகள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை Purolator நிறுவனமும் விடுமுறை காலத்திற்கு 2,400 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்தது.
November முதல் December இறுதி வரை தமது ஊழியர்கள் 54 மில்லியன் பொதிகளை விநியோகிப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதாக Purolator கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீத அதிகரிப்பாகும்.