December 12, 2024
தேசியம்
செய்திகள்

அடுத்த வாரம் வெளியாகும் COVID கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான Ontarioவின் புதிய திட்டம்!

COVID  கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான Ontarioவின் புதிய திட்டம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

பெயர் வெளியிடப்படாத Doug Ford அரசாங்கத்தின் மூத்த அதிகாரி  ஒருவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

Ontario மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கு மூன்றாவது நிலையில் இருந்து வெளியேறுவதற்கான பாதை எச்சரிக்கையானதாக இருக்கும் என அவர் கூறினார்.

தொற்று நடவடிக்கைகளை எளிதாக்குவது தடுப்பூசித் தேவைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் திறன் வரம்புகளை விலக்குவதையும் அடக்கும் என அவர் மேலும் கூறினார்.

ஆனாலும் Ontario அரசாங்கம் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் நீக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக உட்புறங்களில் முகமூடி அணிய வேண்டிய தேவைகள் தொடர்ந்து இருக்கும் எனவும் அவர்  குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் எந்த நாளில் இந்தத் திட்டம் அறிவிக்கப்படும் என்பதையும், தளர்த்தப்பட்ட நடவடிக்கைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஒரு குறிப்பிட்ட தேதியையும் தெரிவிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.

Related posts

சிறுவர்களுக்கு எதிரான குற்ற விசாரணையில் 107 பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும்!

Lankathas Pathmanathan

Poilievre தலைமையில் Toronto பெரும்பாகத்தில் Conservative கட்சி வெற்றி பெறாது: Brown

Lankathas Pathmanathan

Leave a Comment