December 12, 2024
தேசியம்
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெறவேண்டிய இறுதித் திகதியை தாமதப்படுத்தும் Quebec!

Quebec மாகாணம் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெறவேண்டிய இறுதித் திகதியை ஒரு மாதத்திற்கு தாமதப்படுத்துகிறது.

பணியாளர் நெருக்கடி காரணமாக இந்த முடிவை மாகாண அரசாங்கம் எடுத்துள்ளது.

November மாதம் 15ஆம் திகதிக்கு  தடுப்பூசி பெறவேண்டிய இறுதித் திகதி காலக்கெடு நகர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சர் Christian Dubé தெரிவித்தார்.

Quebecகில் இதுவரை 93 சதவிகித Quebec சுகாதாரப் பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

ஆனாலும்  மேலும் 22 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் இதுவரை தடுப்பூசியை பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மோசமடையும் COVID நிலை – அவரசமாக கூடும் Ontario அமைச்சரவை

Lankathas Pathmanathan

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan

Alberta மாகாண தேர்தல் May 29!

Lankathas Pathmanathan

Leave a Comment