கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலை சம நிலையை அடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த தகவல் வெளியானது.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார்.
Delta மாறுபாட்டால் பரவும் தொற்றின் நான்காவது அலை தேசிய அளவில் சம நிலையை அடைவதாக வெள்ளியன்று வெளியான தரவுகளின் மூலம் தெரியவருகிறது.
தடுப்பூசி போடப்படாதவர்கள் தொற்றினால் கடுமையான விளைவுகளை தொடர்ந்து எதிர்கொள்வதாக Tam கூறினார்.
தொற்றின் நான்காவது அலை வளரவில்லை என கூறிய Tam, வரும் வாரங்களில் தொற்றின் எண்ணிக்கை குறையலாம் எனவும் தெரிவித்தார்.
தினசரி தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், Saskatchewan, Alberta, வடமேற்கு பிரதேசங்களில் COVID தொற்று தொடர்ந்து சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது என வெளியிடப்பட்ட புதிய modelling தரவுகள் கூறுகின்றன.
தவிரவும் குறைந்த தடுப்பூசி பெறுவோரை கொண்ட சிறிய சுகாதாரப் பகுதிகளிலும் இதே போன்ற சவால்கள் எதிர்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Delta மாறுபாட்டின் அச்சுறுத்தலின் மத்தியில் தடுப்பூசி பெற்றுக் கொள்வதே அதிக பாதுகாப்பான நகர்வு என மீண்டும் வலியுத்தப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களில் புதிய தொற்றின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருப்பதை தரவுகள் குறிப்பிடுகிறது.
அதேவேளை தடுப்பூசி போடாதவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 36 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகின்றது.
கனடாவில் முழுமையாக தடுப்பூசி போடப்படாத ஆறு மில்லியன் பேர் உள்ளனர் என Tam கூறினார்.