December 12, 2024
தேசியம்
செய்திகள்

சிறுபான்மை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறை: NDP தலைவர் அறிவித்தல்! 

நாடாளுமன்றத்தில் சிறுபான்மை Liberal அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறையை NDP தலைவர் Jagmeet Singh வெளியிட்டார்.

Liberal அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் உட்பட நாடாளுமன்றத்தில் NDP அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதை நிறுத்த முடியும் என Singh கூறினார்.

NDP  உடன்படாத சட்டத்தை பிரதமர் Justin Trudeau முன்வைத்தால், அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதை நிறுத்த தனது நாடாளுமன்ற குழு தயாராக இருப்பதாக Singh தெரிவித்தார்.

தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறிய Trudeau, நாடாளுமன்றத்தில் NDP உடன் ஒத்துழைப்பது பற்றி விவாதிக்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ இதுவரை தொடர்புக்களை மேற்கொள்ளவில்லை என Singh புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

NDP பிரேரிக்கும் கொள்கைகளுடன் முன்னேறுவதன் மூலம் ஒன்றாக செயல்படுவதில் Trudeau தனது ஆர்வத்தை காட்ட முடியும் எனவும் Singh தெரிவித்தார்.

Related posts

மத்திய அரசின் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவு

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்ற சபாநாயகர் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்திப்பு

Lankathas Pathmanathan

41 தூதரக அதிகாரிகளை மீளப்பெற கனடாவிடம் இந்தியா வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment