தேசியம்
செய்திகள்

COVID உதவி நலத் திட்டங்களை நீட்டிக்க அரசாங்கம் அழுத்தத்தை எதிர்கொள்கிறது!.

இந்த மாதம் காலாவதியாகும் COVID உதவி நலத் திட்டங்களை நீட்டிக்க அரசாங்கம் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

மத்திய அரசின்  முக்கிய தொற்று ஆதரவு திட்டங்கள் அடுத்த வாரங்களில் காலாவதியாகிறது.

இந்த நிலையில் உதவித் திட்டங்களை நீட்டிக்க வேண்டும் என சில வணிகத் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

CERS எனப்படும் கனடா அவசர வாடகை மானியம், CEWS எனப்படும் கனடா அவசர ஊதிய மானியம் போன்ற திட்டங்கள் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் முடிவடைகின்றன.

இவை 2020ஆம் ஆண்டில் முதலில் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல முறை நீட்டிக்கப்பட்டன.

இந்த உதவித் திட்டங்கள் மீண்டும்  நீட்டிக்கப்படுமா என புதன்கிழமை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனாலும் COVID பெரும் பரவல் தொடர்ந்து வணிகங்களுக்கு சவாலாக உள்ளது என மாத்திரம் Freeland  பதிலளித்தார்.

கடந்த 26ஆம் திகதி நிலவரப்படி, அரசாங்கம் 4.4 மில்லியன் CEWS விண்ணப்பதாரர்களுக்கு 93.97 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

தவிரவும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான CERS விண்ணப்பதாரர்களுக்கு 6.6 பில்லியன் டொலர்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.

Related posts

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

Lankathas Pathmanathan

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம்: Conservative தலைவர்

Lankathas Pathmanathan

மூன்று விமானங்களில் உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைத்து வர திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment