தேசியம்
செய்திகள்

மத்திய அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு COVID தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசி திட்ட விவரங்களை பிரதமர் Justin Trudeau, துணைப் பிரதமர் Chrystia Freeland உடன் இணைந்து புதன்கிழமை வெளியிட்டார்.

பொது ஊழியர்கள் இந்த மாதம் 29ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அடுத்த மாதம் 15ஆம் திகதிக்குள் அவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பிற்கு உள்ளாக்கப்படலாம்.

விமானம் அல்லது புகையிரத்தில் பயணிக்க விரும்பும் எவரும் இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் தடுப்பூசி பெற்றிருப்பதை நிரூபிக்க வேண்டும்.

இவற்றுக்கு வரையறுக்கப்பட்ட விலக்குகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இது எங்கள் சமூகங்களில் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சி என இந்த அறிவித்தலின் போது Trudeau கூறினார்.

Related posts

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

42 வயதான OPP அதிகாரி சூட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Saskatchewan, Manitoba, Ontario மாகாணங்களின் பாரிய குளிர்கால புயல்!

Lankathas Pathmanathan

Leave a Comment