உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் விடுமுறைக்காக பயணம் செய்தது ஒரு தவறு என பிரதமர் Justin Trudeau ஏற்றுக் கொண்டுள்ளார்.
COVID தடுப்பூசி திட்ட விவரங்களை அறிவித்த செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் இந்த விடயம் குறித்து கருத்துரைத்தார்.
கடந்த வாரம் அரசியல்வாதிகளும் முதற்குடித் தலைவர்களும் விமர்சனங்களை வெளியிட்ட இந்த சர்ச்சை குறித்து முதற் தடவையாக Trudeau கருத்து தெரிவித்தார்.
September மாதம் 30ஆம் திகதியன்று விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டது ஒரு தவறு எனக் கூறிய பிரதமர் அதற்கு தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.
உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாள், முதற்குடியினரும் முதற்குடியினர் இல்லாதவர்களும் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்கவும், எதிர்காலத்தில் கவனம் செலுத்தவும் வேண்டிய தினம் என Trudeau கூறினார்.
கடந்த வியாழக்கிழமை உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் பிரதமர் Trudeau தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட British Columbiaவுக்கு பயணிக்க முடிவு செய்த விடயம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாமை குறிப்பிடத்தக்கது.