கனடாவில் முதற்குடி மக்கள் தொகை 2041ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 3.2 மில்லியனாக உயரலாம் என புள்ளி விபர திணைக்களம் தெரிவித்தது.
பிறப்பு விகிதங்கள் அதிகரிப்பதுடன் அதிகமான மக்கள் சுதேசிகள் என தம்மை அடையாளப்படுத்தினால் இந்த நிலை தோன்றும் என கனடாவின் புள்ளி விபர திணைக்களம் கூறுகின்றன
இந்த போக்கு சமீபத்திய தசாப்தங்களில் முதற்குடி சமூகங்கள் எவ்வாறு சீராக வளர்ந்து வருகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில், முதற்குடி மக்கள் முதற்குடி அல்லாத மக்கள் தொகையை விட வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் உள்ள முதற்குடி மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1.8 மில்லியன் ஆகும்.
அந்த எண்ணிக்கை அனைத்து மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.