தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கான ஆரம்ப COVID தடுப்பூசி சோதனை தரவை Health கனடாவுக்கு சமர்ப்பித்துள்ளோம்: Pfizer அறிவிப்பு

ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி ஆரம்ப சோதனை தரவை Health கனடாவுக்கு சமர்ப்பித்ததாக Pfizer தடுப்பூசி நிறுவனம் கூறுகிறது.

ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாடு இந்த மாதம் ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதாக ஏற்கனவே சுகாதார அமைச்சர் Patty Hajdu கூறியிருந்தார்.

Pfizer நிறுவனத்திடமிருந்து தரவைப் பெற்றவுடன், கட்டுப்பாட்டாளர்கள் இந்தத் தரவை விரைவாக மதிப்பாய்வு செய்வார்கள் எனவும் அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

BioNTech உடன் இணைந்து உருவாக்கப்பட்ட தமது தடுப்பூசி ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என Pfizer நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

கனடாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த தற்போது COVID தடுப்பூசிகள் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய பிரதமர் March 9 தெரிவு

Lankathas Pathmanathan

Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை உறுதி செய்தது!

Lankathas Pathmanathan

விரைவில் அமைச்சரவை மாற்றம்?- நான்கு அமைச்சர்கள் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment