December 12, 2024
தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும்: கட்சி தலைமை வலியுறுத்தல்! 

Conservative கட்சியை தவிர அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னால் COVID தொற்றுக்கு  எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என கட்சி தலைமைகளால் கூறப்பட்டுள்ளது.

இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும் என கட்சி தலைமைகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனது புதிய அமைச்சரவை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் எனவும் இலையுதிர் காலத்தின் இறுதிக்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் எனவும் செவ்வாய்க்கிழமை பிரதமர் Justin Trudeau அறிவித்திருந்த நிலையில் தடுப்பூசிகள் குறித்த கட்சிகளின் நிலைப்பாடுகள் வெளியாகியுள்ளன.

44ஆவது நாடாளுமன்றத்தில்  Conservative 119 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

Conservative கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வான எத்தனை உறுப்பினர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள்  என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Related posts

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு

Lankathas Pathmanathan

February மாதம் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment