தேசியம்
செய்திகள்

Huawei நிர்வாக அதிகாரிக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கைவிட்ட கனடா!

Huawei நிர்வாக அதிகாரி Meng Wanzhouக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கனடா கைவிட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளுடன் Wanzhou இணக்கப்பாடொன்றை கண்ட நிலையில் இந்த நாடு கடத்தல் உத்தரவு கைவிட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை British Colombia மாகாண நீதிபதி அவரை நாடு கடத்தும் வழக்கை தள்ளுபடி செய்தார்.

Wanzhouவுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்காக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்ததை அடுத்து அவரை நாடு கடத்தும் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

விசாரணையின் போது Mengகின் நடத்தைக்காக நன்றி கூறிய நீதிபதி, அவரை தடுப்பு காவல் நிபந்தனைகளில் இருந்து விடுவித்தார்.

இதன் மூலம் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், சில விதிமுறைகளின் கீழ் கனடாவை விட்டு வெளியேறவும் Wanzhouக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த இணக்கப்பாடு மூன்று ஆண்டுகள் நீடித்த முக்கிய புவிசார் அரசியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறது.

இந்த நிலையில் Vancouver சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக Mengவெள்ளிக்கிழமை மாலை சீனா செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார்.

Related posts

இலங்கை அரசின் தலைமைக்கு எதிராக சர்வதேச வழக்குகள் நடத்தப்பட வேண்டும்: கனடிய தமிழ் அமைப்புகள் கோரிக்கை

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

Leave a Comment