நூற்றாண்டுக்கும் மேலாக கனடிய அரசுக்காக நடத்தப்பட்ட குடியிருப்புப் பாடசாலைகளில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு முக்கிய கனேடியப் பிரிவு முதல் முறையாக மன்னிப்பு கோரியுள்ளது.
கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழு இந்த மன்னிப்பு அடங்கிய ஒரு அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
குடியிருப்புப் பாடசாலைகளில் நிகழ்ந்த கொடுமைகளை கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் செய்த கடுமையான துஷ்பிரயோகம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அதேவேளை குடியிருப்பு பாடசாலை அமைப்பில் முதற்குடிகளின் மொழி, கலாச்சாரம் ஆகியன ஒதுக்கப்பட்டது என இந்த அறிக்கையில் கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழு ஏற்றுக் கொண்டது.
எதிர்வரும் December மாதம் பாப்பரசர் குடியிருப்பு பாடசாலைகளில் தப்பிப்பியவர்களை சந்திக்கவுள்ளார் என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.