தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எல்லை திறந்த பின்னர் கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பிரஜைகள் எண்ணிக்கையில் சிறிய எண்ணிக்கையில் மாத்திரம் அரிகரித்துள்ளது.
COVIDக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எல்லை திறந்த முதல் வாரத்தில் கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பிரஜைகள் எண்ணிக்கையில் சிறிய எண்ணிக்கையில் மாத்திரம் அரிகரிப்பு பதிவாகியுள்ளது.
September 6 முதல் September 12 வரை, வர்த்தக விமானத்தில் பயணம் செய்த 95,381 வெளிநாட்டு பிரஜைகள் கனடாவில் தரையிறங்கினர்.
இந்த எண்ணிக்கை இதற்கு முதல் வாரத்தில் 79,886ஆக இருந்தது என கனடா எல்லை சேவை நிறுவனத்தின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றைக் கொண்டு முழுமையாக தடுப்பூசி பெற்ற எவரும் September 7ஆம் திகதி முதல் நாட்டிற்குள் நுழைய முடியும் என கனேடிய அரசாங்கம் July மாதம் அறிவித்திருந்தது.
புதிய COVID நெறிமுறைகளுடன் இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.