Albertaவில் வியாழக்கிழமை 1,660 புதிய COVID தொற்றுகளும் 17 மரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் 1,058 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 226 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களில் 100 சதவிகிதமானவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள் என தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Deena Hinshaw கூறினார்.
British Columbiaவில் 861 தொற்றுக்களும் 5 மரணங்களும் வியாழனன்று பதிவாகியது.
Quebecகில் 754 தொற்றுகளும் 7 மரணங்களும், Ontarioவில் 677 தொற்றுக்களும் 7 மரணங்களும் பதிவாகியுள்ளன.
தவிரவும் Saskatchewanனில் 460 தொற்றுகளையும் 7 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் வியாழக்கிழமை தலா 100க்கும் குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் வியாழனன்று மொத்தம் 4,572 தொற்றுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.