December 12, 2024
தேசியம்
செய்திகள்

மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் SNC நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்களும்!

SNC-Lavalin நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்கள் இருவரும் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.

மேம்பாலக் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், SNC-Lavalin கட்டுமான நிறுவனத்தின் இரண்டு முன்னாள் உத்தியோகத்தர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

RCMPயினால் மோசடி மற்றும் போலி குற்றங்களுக்காக குற்றச் சாட்டுகள் இவர்கள் மீது பதிவாகியுள்ளது.

SNC-Lavalinலின் முன்னாள் துணைத் தலைவர் Normand Morin, SNC-Lavalinலின் சர்வதேச பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் Kamal Francis ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களும், SNC-Lavalin நிறுவனமும் அரசாங்கத்திற்கு எதிரான மோசடி உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என RCMP உறுதிப்படுத்தியுள்ளது.

RCMPயின் நீண்ட மற்றும் விரிவான குற்றவியல் விசாரணையை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Ontario பாடசாலைகள் மீண்டும் நேரடி கல்விக்கு திறக்கும் திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

British Columbiaவில் மேலும் பல கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்றன

Gaya Raja

Leave a Comment