தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Vancouver Granville தொகுதியில் NDP சார்பில் தேர்தலை எதிர்கொண்ட தமிழரான அஞ்சலி அப்பாதுரை 258 வாக்குகளினால் தோல்வியடைந்தார்.

திங்கட்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத ஒரு தொகுதியாக இந்தத் தொகுதி இருந்தது.

இந்தத் தொகுதியில்  Liberal கட்சியின் வேட்பாளர் Taleeb Noormohamed வெற்றி பெற்றவராக அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டார்.

அங்கு போட்டி மிக நெருக்கமாக இருந்த நிலையில் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே இறுதி முடிவு புதன்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் Vancouver Granville தொகுதியை சுயேச்சை உறுப்பினர் Jody Wilson-Raybould வெற்றி பெற்றிருந்தார்.

தொடர்ந்தும் பல தொகுதிகளின் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாத நிலை தொடர்கின்றது.

பல தபால் மூல வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் 9 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் புதன்கிழமை மாலை (EST) இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இவற்றில் 5 தொகுதிகளில் Liberal, 1 தொகுதியில் Conservative, 1 தொகுதியில் Bloc Quebecois, 2 தொகுதிகளில் NDP கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டிய தொகுதிகளின் முடிவுகள் ஒட்டுமொத்த தேர்தல் முடிவை பாதிக்காது.

ஆனாலும் இந்த தேர்தல் முடிவுகள் அந்தத் தொகுதிகளின் வாழும் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related posts

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta விலகல்

Lankathas Pathmanathan

நகரசபை தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்கா புதிய ஜனாதிபதி – இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment