Ontario மாகாணத்தில் மீண்டுமொரு முடக்கத்தை தவிர்ப்பதே புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த தடுப்பூசி சான்றிதழின் பிரதான குறிக்கோள் என முதல்வர் Doug Ford கூறினார்.
Ontarioவில், தடுப்பூசி சான்றிதழ் பாவனை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நடவடிக்கை தற்காலிகமானது என குறிப்பிட்ட முதல்வர், தொற்றின் பரவலை எதிர்த்து போராடுவதற்கான முக்கியமான நடவடிக்கை இது எனவும் கூறினார்.
புதன்கிழமை முதல் உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், மதுபான விடுதிகள், திரையரங்குகள், இரவு நேர களியாட்ட விடுதிகள் போன்ற, அத்தியாவசியமற்ற உள்ளக வர்த்தக நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு, தடுப்பூசி சான்றிதழ் கோரப்படுகிறது.
தடுப்பூசி சான்றிதழ் குறித்து, வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் அறிவூட்டும் நடவடிக்கைகள் இந்த வாரம் பிரதானமாக முன்னெடுக்கப்படவுள்ளது.