தேசியம்
செய்திகள்

தேர்தல் வெற்றிக்கு Trudeauவை வாழ்த்திய அமெரிக்க அதிபர்!

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் Justin Trudeauவை அமெரிக்க அதிபர் Joe Biden வாழ்த்தியுள்ளார்.

செவ்வாய்கிழமை Trudeauவை தொலைபேசியில் அழைத்த Biden, வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களும் இந்த தொலைபேசி அழைப்பின் போது தங்கள் நாடுகளின் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உரையாடினார்கள்.

COVID தொற்றின் எதிர் நடவடிக்கைகளில் தொடர்ந்து இணைந்து செயல்படுவதற்கும் இரு நாடுகளும் தலைவர்களும் உறுதியளித்தனர் என பிரதமர் Trudeauவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்ளும் 3.5 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஷோபிகா வைத்தியநாதசர்மா

Gaya Raja

கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment