திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் இரண்டு பிரதான கட்சி தலைவர்கள் வெற்றி பெறவில்லை.
கனடா மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernier தான் போட்டியிட்ட Beauce தொகுதியில் 18.4 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார் .
பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul தான் போட்டியிட்ட Toronto Centre தொகுதியில் 8.5 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார் .
அதேவேளை – Papineau தொகுதியில் போட்டியிட்ட Liberal கட்சி தலைவர் Justin Trudeau 49.5 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் .
Durham தொகுதியில் போட்டியிட்ட Conservative கட்சி தலைவர் Erin O Toole 46.6 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்
Beloeil—Chambly தொகுதியில் போட்டியிட்ட Bloc Québécois கட்சி தலைவர் Yves-François Blanchet 53.2 சதவீதவாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்
Burnaby தெற்கு தொகுதியில் போட்டியிட்ட NDP தலைவர் Jagmeet Singh 39.8 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.