Alberta மாகாணத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.செவ்வாய்கிழமை மாலை முதல்வர் Jason Kenney இந்த மாற்றத்தை அறிவித்தார்.
இதில் மாகாண சுகாதார அமைச்சர் Tyler Shandro தனது பதவியை இழந்துள்ளார். Shandro தொழிலாளர் மற்றும் குடிவரவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தொழிலாளர் மற்றும் குடிவரவு அமைச்சர் Jason Copping புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
COVID தொற்றின் பரவலை கையாண்டமை குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், Shandro தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், அதை முதல்வர் Kenney ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவருகிறது.