இம்முறை பொதுத் தேர்தலில் முழுமையாக வாக்குகளை எண்ணுவதற்கு 5 நாட்கள் வரை எடுக்கலாம் என கனேடிய தேர்தல் திணைக்களம் கூறுகிறது.
தபால் மூல வாக்குகள் இம்முறை அதிகரித்த நிலையில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு சில தினங்கள் எடுக்கலாம் என தேர்தல் திணைக்கள பேச்சாளர் கூறினார்.
தபால் மூல வாக்குகள், உள்ளூர் தேர்தல் திணைக்களத்தில் பதிவான வாக்குகள் என்பன குறைந்த பட்சம் September 21 வரை எண்ணப்படமாட்டாது.
தேர்தல் திணைக்களம் வழங்கிய ஆரம்ப புள்ளி விவரங்களின்படி 5.78 மில்லியன் கனேடியர்கள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் தங்கள் வாக்குகளை அளித்தனர்.
அதேவேளை 1.2 மில்லியனுக்கும் அதிகமான தபால் மூல வாக்குச் சீட்டுகளும் இம்முறை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.